இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான ரூமா பைரபகா, அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா நடுநிலைப் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வருகிறார். தற்போது டீச்சர் ரூமா மாணவர் விசாவில் தான் அமெரிக்காவில் தங்கியுள்ளார். இவர் மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தை எடுத்து வருகிறார். இந்த டீச்சர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய நிர்வாண போட்டோக்களை 13 வயது சிறுவனுக்கு அனுப்பி வைத்து, தவறாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அந்த சிறுவனும் அதே பகுதியை சேர்ந்தவன் தான் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ஆரம்பத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை சிறுவனுக்கு அனுப்பும் அளவுக்கு வயது வித்தியாசமின்றி காதலை வளர்த்து வந்துள்ளார். பின்னர் இந்த விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரிந்ததும் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய அந்த டீச்சரை கைது செய்யப்பட்டனர். மேலும் இவருக்கு அமெரிக்க குடியுரிமையும் இல்லை. ஒருவேளை போலீஸ் காவலிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டால், குடியேற்ற காவலில் வைக்கப்படுவார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 18 வயதிற்கும் கீழ் உள்ள யாரையுமே இனி டீச்சர் சந்திக்கக்கூடாது எனவும், அவரது பாஸ்போர்ட்டையும் மாவட்ட வக்கீல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பின்னர் மேலும் விசாரணையில் அந்த சிறுவனுக்கு டீச்சர் மீது காதல் இருக்கிறது என்று தெரிய வந்தது. அதனால் டீச்சரை பல சமயங்களில் வீட்டிற்கு தெரியாமல் சென்று சந்தித்து டீச்சருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் இன்னும் பெரிய அளவில் பரவினால் டீச்சர் நாடு கடத்தப்படலாம் என்றும், தகவல்கள் வந்துள்ளது.
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…