நியூசிலாந்தை சேர்ந்தவர் லூகாஸ். இவரது மகன் ஸ்டீவ் வயது(10) ஆகிறது. இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது பாட்டியை பார்க்க தனது தாயுடன் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.
அப்போது ஸ்டீவை விமானத்தில் ஏற அனுமதிக்கமுடியாது என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான முக்கிய காரணம் ஸ்டீவ் அணிந்திருந்த டி-சர்ட் தான். அந்த டி-சர்ட்டில் பச்சை நிறத்திலான பாம்பு இருப்பது போன்ற புகைப்படம் இருந்தது இது போன்ற புகைப்படங்கள் கொண்ட டி-சர்ட் அணிந்து கொண்டு விமானத்தில் ஏற கூடாது.
அப்படி ஏறினால் சக பயணிகளுக்கு பயம் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர். இதைத் தொடர்ந்து இந்த சின்ன விஷயத்துக்காக விமானத்தை தவற விட வேண்டாம் என நினைத்து ஸ்டீவ் தாய் லூகாஸ் ஸ்டீவை டி-சர்ட்டை உள்பக்கமாக திருப்பி போட சொல்லியுள்ளார்.
பின்னர் ஸ்டீவ் டி-சர்ட்டை மாற்றிக் கொண்ட பிறகு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா வந்தவுடன் இதுதொடர்பாக விமான நிறுவனத்திற்கு லூகாஸ் மெயில் அனுப்பினார். இதற்கு பதிலளித்த அந்த விமானத்தின் நிர்வாகம் எங்கள் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வந்ததற்கு நன்றி.
இது தொடர்பாக அதிகாரிடம் நாங்கள் விளக்கம் கேட்டுள்ளோம் விரைவில் உங்களுக்கு முழுமையான விளக்கம் கொடுக்கப்படும் என அந்த விமான நிறுவனம் கூறியுள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…