கொரோனாவையும் வென்ற 2ம் உலகப்போரை வென்ற 99 வயது முன்னாள் ராணுவ வீரர்!
பிரேசிலில் உள்ள 99 வயது நிறைந்த முன்னாள் ராணுவ அதிகாரி தான் எர்மேண்டோ பைவெட்டா. இவர் பிரேசிலில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் இருந்து உயிர் தப்பி வென்றவர்.
இந்நிலையில், இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பிரேசிலை சேர்ந்த ராணுவத்துறையினருக்கான மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு 8 நாட்கள் போராட்டத்திற்கு பின்பு தற்போது குணமடைந்து பச்சை தொப்பி அணிந்து கை அசைத்து வெளியேறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் அவரை கீத வாக்கியம் அமைத்து அனுப்பியுள்ளது. அந்நாட்டு ராணுவம் அவர் மற்றொரு போரையும் வென்றிவிட்டதாக கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.