99 சதவீதம் ஓட்டுப்பதிவு!! ஓட்டு போட சென்றவர்களின் கைபேசிகள் பறிமுதல்..
நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி சார்பில் பீஹார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்., தலைமையிலான 18 எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிட்டனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தேர்தலின் ஓட்டுப் பதிவு தலைநகர் டில்லியிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும் நேற்று நடந்தது. தேர்தலுக்காக பார்லிமென்ட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி முதல் தளத்தில் உள்ள 62ம் எண் அறை ஓட்டுச்சாவடியாக மாற்றப்பட்டிருந்தது.சிறப்பு அனுமதி காலையில் முதல் நபராக பிரதமர் நரேந்திரமோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.பிரதமருக்கு அடுத்ததாக பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஓட்டுப் போட்டார். குஜராத் எம்.எல்.ஏ.,வாக உள்ள அமித் ஷா தேர்தல் கமிஷனின் சிறப்பு அனுமதி பெற்று பார்லிமென்ட் ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுலும் ஒன்றாக வந்து ஓட்டளித்தனர்.முந்தைய தேர்தல்களைப் போல அல்லாமல் ஓட்டளிக்கு வரும் எம்.பி.,க்களின் சொந்த பேனாக்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர்.
தேர்தல் கமிஷன் சார்பில் அளிக்கப்பட்ட பேனாவை மட்டுமே பயன்படுத்த அறிவுறுத்திய அலுவலகர்கள் ஓட்டளித்தபின் அந்த பேனாவை வாங்கி வைத்துக் கொண்டனர். தமிழக எம்.பி.,க்களில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ம.க., – எம்.பி., அன்புமணி ஆகியோரைத் தவிர மற்ற எம்.பி.,க்கள் அனைவரும் வந்திருந்தனர். பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.,க்கள் ஒன்பது பேரும் ஒன்றாக வந்து ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் 99 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கருணாநிதி வரவில்லைதேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 20ல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.