கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பழம்பெரும் மலையாள நடிகர் ஆகிய உன்னிகிருஷ்ணன் அவர்கள் நேற்று காலமானார்.
உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. அதிலும் முக்கியமாக பல நடிகர்களும், முக்கியமான அரசியல்வாதிகளும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மலையாளத்தில் பிரபலமான பழம்பெரும் நடிகர் ஆகிய உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அவர்கள் பல திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர. அப்பா, தாத்தா போன்ற வேடங்களில் தான் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாகிய இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மருத்துவமனையிலேயே இவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பெற்று வந்த உன்னி கிருஷ்ணன் நேற்று காலமாகியுள்ளார். இவரது மறைவுக்கு அணைத்து திரையுலகினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…