ரஷ்ய தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழப்பு: அதிபர் செலன்ஸ்கி..!
கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். அப்போது தங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி, தங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று செலன்ஸ்கி கூறினார்.
ரஷ்ய படைகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும்பள்ளிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதால் தலைநகர் கீவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த போரினால் உக்ரைனில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலையும் செலன்ஸ்கி வெளியிட்டார்.