இந்தியில் ரீமேக் ஆகும் “96”..! நெகிழ்ச்சியில் மக்கள் செல்வன் ட்வீட்..!

Default Image

96 திரைப்படம் இந்தியில் ரிமேக் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’96’. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது.

தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் தமிழில் கண்ட வெற்றியை அடையவில்லை. இந்நிலையில், தற்போது ’96’ படத்தின் இந்தி ரீமேக்காகிறது. இந்த இந்தி ரீமேக் உரிமையைக் அஜய் கபூர் கைப்பற்றியுள்ளார்.

இதில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதெல்லாம் இன்னும் படக்குழு அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'96' has been a lovely experience

இது குறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் ” ஒரு நடிகராக ரசிகர்களின் ரசனைக்கு ஒத்துப்போகும் கதைகளைச் சொல்வதில் எனக்கு அதீத சந்தோஷம் கிடைக்கும். அந்தக் கதை அதிக ரசிகர்களைச் சென்றடையும்போது என் மகிழ்ச்சி இன்னும் அதிகமாகிறது. ’96’ படம் எனக்கு அலாதியான அனுபவமாக இருந்தது. இப்போது தயாரிப்பாளர் அஜய் கபூர் அந்தப் பயணத்தை இந்தி ரீமேக்கில் தொடரவிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன்”. என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்