95 லட்சம் மதிப்புள்ள டீ பாத்திரத்தை வீட்டை சுத்தம் செய்கையில் கண்டறிந்த 51 வயது நபர்.!
லண்டனை சேர்ந்த 51 நபர் தனது வீட்டினை சுத்தம் செய்கையில் கி,பி 1735 – 1799 க்கு இடைப்பட்ட காலத்தில் பெய்ஜிங்கில் உபயோகப்படுத்தப்பட்ட டீ பாத்திரம் கிடைக்கப்பெற்றது. இதன் இந்திய மதிப்பு சுமார் 95 லட்சம் ஆகும்.
லண்டனை சேர்ந்த சார்லஸ் ஹென்சன் என்ற 51 வயது நபர் ஊரடங்கின் காரணமாக தனது வீட்டை சுத்தம் செய்கையில் ஓர் பழங்கால டீ பாத்திரத்தை கண்டறிந்துள்ளார். அது அவரது பழைய கேரேஜை சுத்தம் செய்கையில் கிடைத்துள்ளது. அந்த டீ பாத்திரத்தை அதன் மதிப்பு தெரியாமல் வீட்டினுள் வைத்துள்ளார்.
வீட்டை சுத்தம் செய்த பின்னர் கிடைத்த அந்த பழங்கால டீ பாத்திரத்தை பழங்கால பொருட்களை ஏலம் விடும் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அதனை பரிசோதித்த நபர் இதன் உண்மையான தற்போதைய விலையை கூறியுள்ளார்.
இதன் விலை சுமார் 1 லட்சம் லண்டன் டாலர் ஆகும். இந்திய மதிப்பின் படி, சுமார் 95 லட்சம் ரூபாய் ஆகும். இந்த பழங்கால டீ பாத்திரமானது கி,பி 1735 – 1799 க்கு இடைப்பட்ட காலத்தில் பெய்ஜிங்கில் உபயோகப்படுத்தப்பட்டதாகும்.