93 வயது முன்னாள் அமெரிக்க துணை அதிபர் வால்டர் மண்டிலி மரணம்!
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் 39வது அதிபராக ஜிம்மி காட்டர் அவர்கள் 1977-1981 வரை பதவி வகித்து இருந்த பொழுது அமெரிக்காவின் 42வது துணை அதிபராக 1977 முதல் 1981 வரை பணியாற்றியவர் தான் வால்டர் மண்டிலி. மேலும் இவர் பில் கிளிங்டன் அவர்கள் அதிபராக இருந்த பொழுது 1993 முதல் 1996 வரையிலும் ஜப்பானுக்கான அமெரிக்க தூதரக செயல்பட்டுள்ளார். அதன்பின் வயது முதிர்வு காரணமாக அரசியலை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலகியிருந்தார் வால்டர்.
இந்நிலையில், இவருக்கு தற்போது 93. வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக தற்பொழுது வால்டர் அவர்கள் உயிரிழந்துள்ளார். முன்னாள் துணை அதிபர் வால்டர் உயிரிழந்ததற்கு அவருடன் பணியாற்றியுள்ள முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.