92 வயதில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் அமெரிக்க முன்னால் அதிபர்!!!

Default Image
வின்னிபெக், கனடா
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஏழைகளுக்கு வீடு கட்டும் பணியை செய்யும் அதே நேரத்தில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் கோல்ஃப் விளையாட்டுப் போட்டிகளை ரசித்து பொழுது போக்குகிறார்.
அமெரிக்க அதிபராக 1977 முதல் 1981 வரை பணியாற்றியவர் ஜிம்மி கார்ட்டர். அவர் அதற்குப் பின் சமூக சேவையில் ஈடுபட்டார். அவரது மக்கள் சேவையைப் பாராட்டி 2002ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்போது அவருக்கு 92 வயதானாலும், இப்போதும் ஏழைமக்களுக்காக கனடாவில் உள்ள வின்னிபெக் என்னும் நகரில் வீடுகள் அமைத்துத் தந்துள்ளார்.
இந்த கட்டிடம் அவர் கட்டித்தரும் 34ஆவது கட்டிடம் ஆகும். அவருக்கு இந்த வேலைகளில் உதவியாக இருப்பது 89 வயதான அவர் மனைவி ரோசலின்.
முன்னால் அதிபர் சமுக சேவை செய்து கொண்டிருக்க தற்போது அதிபரான டொனால்ட் ட்ரம்ப்  கோல்ஃப் விளையாட்டை பார்பதிலேயே கவனமாக இருக்கிறார். அவர் பதவி ஏற்ற 176 நாட்களில் 36 நாட்கள் கோல்ஃப் விளையாட்டை பார்த்து ரசிப்பதில் கழித்துள்ளார். 
ஒபாமா அதிபராக இருந்த போது வெறும் 8 தினங்கள் மட்டுமே கோல்ஃப் போட்டிகளுக்கு வந்துள்ளார்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்