அதிவேகமாக 9000 ரன்கள் விராத் சாதனை !ஆனாலும் இதை முறியடிக்க பின்னாலே வருகிறார் அம்லா!
இந்திய மற்றும் நியூ சீலாந்து அணிகள் இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் நேற்று 9,000 ரன் கடந்தார். கிராண்ட்ஹோம் வீசிய 37வது ஓவரில் பவுண்டரி விளாசியபோது இந்த சாதனை மைல் கல்லை எட்டினார். சச்சின், கங்குலி, டிராவிட், அசாருதீன், டோனி ஆகியோரை தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன் எடுத்த 6வது இந்திய வீரர் என்ற பெருமை கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. உலக அளவில் 19வது வீரர் ஆவார். மேலும், இந்த சாதனை மைல் கல்லை அதிவிரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையும் அவருக்கு சொந்தமாகி உள்ளது. கோஹ்லி தனது 194வது இன்னிங்சில் (202வது போட்டி) 9000 ரன் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக, தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் 205வது இன்னிங்சில் 9000 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி நேற்று தனது 32வது சதத்தை பதிவு செய்தார். 31வது சதம் அடித்தபோது ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங்கை பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்தவர், முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையையும் (49 சதம்) இன்னும் சில ஆண்டுகளில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். ரிக்கி பான்டிங் (ஆஸி. 1424 ரன்), இன்சமாம் உல் ஹக் (பாக். 1373 ரன்) இருவரையும் நேற்று அவர் முந்தினார். அனைத்து வகை போட்டிகளிலும் சேர்த்து இந்த ஆண்டு 2000 ரன் கடந்த முதல் வீரரும் கோஹ்லி தான். தென் ஆப்ரிக்காவின் ஹாஷிம் அம்லா 1988 ரன் விளாசி 2வது இடத்தில் உள்ளார்.
ஆனால் இருந்தாலும் இந்த சாதனை முறியடிக்க தென் ஆப்ரிக்கா வீரர் ஹாஷிம் அம்லா அவர் பின்னாடியே வருகிறார் .ஏனென்றால் அவர் விராத் அடித்த சதம் மற்றும் ரன்களை அவர் தான் முறியடித்து வருகிறார்.