அமெரிக்காவில் நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றிய 6 வயதுச் சிறுவன்.
அமெரிக்காவில் கடந்த 9-ம் தேதி பிரிட்ஜர் என்ற 6 வயது சிறுவன், தனது தங்கையை ஒரு நாய் தாக்க வருவதைப் பார்த்துள்ளான் . இதனால், உடனடியாக அந்த நாய் முன்னால் நின்று தனது தங்கையை காப்பாற்றியுள்ளான். அப்போது அந்த நாய் பிரிட்ஜரின் முகத்திலும், தலையிலும் கடித்து குதறி உள்ளது. ஆனாலும், பிரிட்ஜர் தனது தங்கையின் கையைப் விடாமல் பிடித்து கொண்டு இருவரும் தப்பி விட்டனர்.
இந்த தாக்குதலில் பிரிட்ஜரின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து பிரிட்ஜரின் அத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், எனது மருமகன் ஒரு ஹீரோ. தாக்க வந்த நாயிடமிருந்து தன் தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான். இதுகுறித்து அவனிடம் கேட்டபோது ” அங்கு யாராவது இறந்து போக வேண்டும் என்றால் அது நானாக இருக்கட்டும் என்று நினைத்தேன்” என்று சொன்னான். இந்தத் தாக்குதலில் பிரிட்ஜரின் முகம் உட்பட உடலில் கிட்டத்தட்ட 90 தையல்கள் போடப்பட்டுள்ளன.
தற்போது, பிரிட்ஜர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மற்ற நடிகர்களிடம் இந்தத் தகவலைச் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களுக்குத் துணையாக இன்னொரு ஹீரோ வந்திருக்கிறான் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என பதிவிட்டு இருந்தார்.
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…