உலகில் கோவிட்-19 எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் 90% பேர்.! ஆனாலும் ஓர் ஆபத்து.! WHO சிறப்பு தகவல்.!
உலக மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா கோவிட்-19 தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலானோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கோவிட் 19 தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வந்தனர்.
இருந்தாலும், கொரோனா வைரஸ் கோவிட் 19 எனும் மாறுபாட்டை தாண்டி அடுத்தடுத்த வடிவங்களில் வந்து அவ்வப்போது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இருந்தாலும், கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு மற்ற கொரோனா வகைகளை எதிர்கொள்ள உதவியது என்றே கூறலாம். அதன் காரணமாக பெரும்பாலான இழப்பு தவிர்க்கப்பட்டது என்பதே உண்மை.
இது பற்றி உலக சுகாதார அமைப்பான WHO கூறுகையில், ‘ தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றபின் அல்லது தடுப்பூசி காரணமாக, உலக மக்கள்தொகையில் குறைந்தது 90% பேர் இப்போது தற்போதுள்ள கொரோனா வைரசுக்கு எதிராக ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
தொற்றுநோய் அவசர கட்டம் முடிந்துவிட்டது என்று கூறும் அளவுக்கு தற்போது நாம் மிகவும் நெருங்கி வந்துவிட்டோம். ஆனால் நாங்கள் இன்னும் அதனை எட்டவில்லை. எனவும் WHO கூறியுள்ளது.
கடந்த வாரம், புதுப்பிக்கப்பட்ட கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகள் சமீபத்திய சோதனைகளில் பல்வேறு வகைகளில் ஒப்பிடும்போது சிறந்த பாதுகாப்பை வழங்க வாய்ப்புள்ளது எனவும் WHO குறிப்பிட்டுள்ளது.
360,000 க்கும் மேற்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், பழைய தடுப்பூசியின் நான்கு டோஸ்கள் வரை பெற்றவர்களுக்கு புதிய வகை கொரோனா வகைக்கு எதிராக எதிர்ப்பு சக்தி அதிகரித்து பாதுகாப்பை வழங்குகின்றன என்று WHO சுட்டிக்காட்டியுள்ளது.