சீனாவில் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி..!
சீனாவில் ரயில்வே ஊழியர்கள் 9 பேர் மீது ரயில் மோதியதில், 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சீனாவில் உள்ள கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை ஜின்சங்கில் உள்ள ரயில்வே ஊழியர்களின் மீது பயணியர் ரயில் ஒன்று மோதியுள்ளது. இதில் 9 ரயில்வே கட்டுமான ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த ரயில் ஜின்ஜியாங் மாகாணத்தின் உரும்கி நகரிலிருந்து ஜெயியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்கோ நகருக்கு சென்றுள்ளது. இந்த விபத்து குறித்த காரணம் வெளியாகாத நிலையில் இந்த சம்பத்தை குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.