தேர்தல் பற்றி போலியான செய்தியை பேஸ்புக்கில் பதிவு செய்த 9 பேர் கைது!
தாய்லாந்து நாட்டில் பேஸ்புக்கில் தேர்தல் கமிஷனர் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையில் 6 லட்சம் போலி வாக்குகளை சேர்த்து உள்ளனர் என போலியான செய்தியை பதிவு செய்தனர்.
தாய்லாந்து நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது .இந்நிலையில் கடந்த 24-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்குஅளித்தனர்.
ராணுவத்தின் ஆதரவை பெற்றுள்ள பாலங் பிரச்சாரத் கட்சி முன்னணியில் உள்ளதாக தேர்தல் கமிஷன் முதலில் அறிவித்தது பின்னர் தேர்தலில் பல முறைகேடுகள் உள்ளது என புகார்கள் எழுந்ததால் மே மாதம் வரை தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில்லை என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் பேஸ்புக்கில் தேர்தல் கமிஷனர் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கையில் 6 லட்சம் போலி வாக்குகளை சேர்த்து உள்ளனர் என போலியான செய்தியை பதிவு செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கணினி குற்ற சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என போலீசார் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.