6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் ஓடிய 9 மாத கர்ப்பிணி.
சாதாரணமாக ஒரு பெண்ணால் நீண்ட தூரம் நடந்தாலே, ஒரு அளவு தூரத்துக்கு மேல் அவர்களால் நடக்க முடியாது. களைத்து விடுவார்கள். ஆனால், நிறை மாத கர்ப்பிணியான தடகள வீராங்கனை மக்கெனா மைலர் செய்துள்ள சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தடகள வீராங்கனை மக்கெனா மைலர் 9 மாத நிறை மாத கர்ப்பிணியாவர். இவர் 6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். இவரது இந்த சாதனை உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது இந்த சாதனை புரிய அவரது துணையும் உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தியுள்ளார். தடகள வீரரான மக்கெனா மைலர் தனது பிறக்காத குழந்தையுடன் தனது ஓடும் இலக்கை நிறைவு செய்தது, சாதாரண சாதனை இல்லை. ஆரோக்கியமாக இயங்கும் பழக்கமுள்ள ஒரு சாதாரண நபர் வழக்கமாக சராசரியாக 9-10 நிமிடங்களில் 1.6 கி.மீ (1 மைல்) ஓட முடியும். ஆனால் மைலர் அதை கிட்டத்தட்ட பாதி நேரத்தில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…