வடகிழக்கு சீன மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் ஒரு வருடமாக பிரீசரில் (freezer) வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் சூப்பை சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 5 ஆம் தேதி காலையில் ஒரே குடும்பத்தை சார்ந்த 12 பேர் காலை உணவாக புளித்த சோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட அடர்த்தியான நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தனர்.
அவர்களில் ஏழு பேர் அக்டோபர் 10-ம் தேதி இறந்ததாகவும், எட்டாவது மரணம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவும், கடைசியாக உயிரிழந்தவர் கடந்த திங்கள்கிழமை இறந்தார் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன சுகாதார ஆணையம் திங்களன்று ஒரு தேசிய எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப் நூடுல்ஸ் ஒரு வருடமாக பிரீசரில் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்ததால் அதை சாப்பிடுவதற்கு முன்பு மோசமாகிவிட்டது.
அதை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளனர். புளித்த மாவில் இருந்து உணவு தயாரிப்பதை அல்லது சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியது.
புளித்த மாவு மற்றும் அரிசி பொருட்களிலிருந்து போங்க்கிரெக்கி என்ற நச்சு அமிலம் உருவாகும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, நன்கு சமைத்தாலும் அதை அகற்ற முடியாது என்று சீனாவின் வேளாண் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஃபேன் ஜிஹோங் தெரிவித்தார்.
போங்க்ரெக்கிக் அமிலத்தால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…