பாகிஸ்தான் நாட்டில் புயல் மற்றும் கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பலத்த புயல் காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் அங்குள்ள வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளது. மேலும், அங்கு அடித்த புயல் காற்றால் பல மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் ஆங்காங்கு சாய்ந்தன. இதனால், அங்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
எதிர்பாராமல் பெய்த பெரிய கனமழையால் அங்குள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றிவருகின்றனர். மேலும், ஸ்வாட், திர், சித்ரால், மன்சீரா போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் அங்கு மீட்பு பணியில் பேரிடர் மீட்பு படையினர் செயல்பட்டு வருகின்றனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…