மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை விபத்து.! 9 பேர் உயிரிழப்பு.! 

San Pedro Garza Garcia - Nuevo Leon - Mexico

சென்னை: மெக்சிகோவில் குடிமக்கள் இயக்கம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவில் வரும் ஜூன் 2ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடிமக்கள் இயக்கம் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் போட்டியிடுகிறார். நேற்று மெக்சிகோவின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸிற்கான பிரச்சார மேடை அமைக்கப்பட்டது.

பிரச்சார மேடை அமைக்கப்பட்ட இடத்தில் பலத்த காற்றடித்த காரணத்தால், பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நியூவோ லியோன் கவர்னர் சாமுவேல் கார்சியா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், விபத்தில் சிக்கியவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். இதுவரை 8 பெரியவர்கள் 1 சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய  ஜனாதிபதி வேட்பாளராக ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ், இவ்வளவு துயரமான செய்தியை நான் பார்த்ததில்லை. விபத்து குறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும். என்றும்  உயிரிழந்தோர் குறித்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்