9 இயக்குனர்கள்.! 9 கதைகள்.! 9 உணர்ச்சிகள்.! வெளியானது நவரசா டிரைலர்.!

Default Image

நவரசா தொடரின் ட்ரைலர் இன்று காலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது யூடியூப் சேனனில் வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக ’நவரசா’ ஆந்தாலஜி படத்தை தயாரித்துள்ளனர். 9 கதைகளை உள்ளடக்கியுள்ள இந்த இணையதள தொடர் ஒவ்வொன்றும் 9 உணர்ச்சிகளை அடிப்படியாக கொண்டது.

இந்த “நவரசா” வெப் தொடரை கவுதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், வஸந்த் சாய், பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு உணர்ச்சிகளை படமாக்கியுள்ளனர்.

இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், அதர்வா, யோகி பாபு, அசோக் செல்வன் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பார்வதி, ரம்யா நம்பீசன், பிரசன்னா, அதிதி பாலன், ரித்விகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதற்கான டீசர் கடந்த 9- ஆம் தேதி வெளியானது, இதனை தொடர்ந்து நவரசா தொடரின் ட்ரைலர் இன்று காலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது யூடியூப் சேனனில் வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் ரசிகர்கள் எதிர்பார்த்த படி மனிதர்களின் ஒன்பது உணர்ச்சிகளையும்,  உள்ளடக்கி அனைவரும் ரசிக்கும் படி வெளியாகியுள்ளது. இந்த ஆந்தாலஜி படம் வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்