9 வயது சிறுவன் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத சகோதரியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை !
9 வயது சிறுவன், அமெரிக்காவில் வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத சகோதரியை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மிஸ்ஸிசிப்பியில் ஒரு வீட்டில் 13 வயது சிறுமி வீடியோ கேம் விளையாடியுள்ளார். அப்போது அவரது சகோதரன் தாம் விளையாட வேண்டும் என்று கூறி, ஜாய் ஸ்டிக்கை பறிக்க முயன்றான். ஆனால் அந்தச் சிறுமி ஜாய் ஸ்டிக்கை கொடுக்காததால், ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து, தனது சகோதரியின் பின் தலையில் வைத்து சுட்டான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தச் சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.