கடந்த ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
பெங்களூரு : மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின்படி, 2016 – 17 ம் கல்வியாண்டில் 889 அதாவது 9 சதவீதம் ஐஐடி மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விட்டுள்ளனர்.இவர்களில் 71 சதவீதம் (630) பேர் பட்டமேற்படிப்பு மாணவர்கள், 196 பேர் ஆராய்ச்சி மாணவர்கள், 63 பேர் இளநிலை பட்டபடிப்பு படிப்பவர்கள் ஆவர். நாடு முழுவதிலும் உள்ள 9885 ஐஐடி இடங்களில் 73 காலியாகவே உள்ளன. 2015 – 16 ம் கல்வியாண்டில் 23 ஐஐடி.,க்களைச் சேர்ந்த 656 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு இது 35 சதவீதம் அதிகரித்துள்ளது.பொது துறை நிறுவனங்களில் தங்களின் படிப்பிற்கு ஏற்ற வேலைவாய்ப்புக்கள் கிடைக்காததாலும், தவறாக ஐஐடி.,படிப்பை தேர்வு செய்து அதில் சரியாக படிக்க முடியாமல் போதும் மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விடுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. மாணவர்கள் அதிகம் வெளியேறும் ஐஐடி.,க்களில் ரூர்கி முதல் இடத்திலும், டில்லி 2வது இடத்திலும், கான்பூர் 3வது இடத்திலும், காரக்பூர் 4வது இடத்திலும் உள்ளன