ஜார்ஜ் பிளாயிட்டின் மரணம் தொடர்பான போராட்டத்தின் போது காவல் நிலையத்திற்கு தீ வைத்தவருக்கு 88 கோடி அபராதம்!
அமெரிக்க கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தொடர்பாக அமெரிக்காவில் வெடித்த போராட்ட நேரத்தில் போலீஸ் காவல் நிலையத்தில் தீ வைத்த அமெரிக்க நபருக்கு 12 மில்லியன் டாலர் அதாவது 88 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாயிட் அவர்கள் மீது கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஜார்ஜின் கழுத்தில் மண்டியிட்டு அவர் மூச்சு திணறுகிற வரை அவர் கழுத்தில் அழுத்தம் கொடுத்ததால் ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் போலீஸ் அதிகாரிக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், ஜார்ஜின் மரணம் தொடர்பாக அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் வெடித்தது.
கறுப்பினத்தவருக்கு எதிராக பல கொடுமைகள் நடைபெறுவதாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது காவல் நிலையம் ஒன்றும் தீ வைக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்தினை தீ வைத்த அமெரிக்காவை சேர்ந்த ராபின்சன் என்பவருக்கு 12 மில்லியன் டாலர் அதாவது 88 கோடி அபராதம் செலுத்த தற்பொழுது உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எதார்த்தமாக நடந்தது இல்லை என்பதால் ராபின்சன் நிச்சயம் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.