SBI அப்ரெண்டிஸ் பணிக்கு 8500 காலியிடங்கள் அறிவிப்பு..!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் வருகின்ற டிசம்பர் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 8500 காலியிடங்கள் உள்ளன. வருகின்ற 2021 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வு மூலம் அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும்.
நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
மொத்த காலியிடங்கள்: 8500
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி: SBI Apprentice
தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க: SBI Apprentice 2020 என்ற லீக்கை கிளிக் செய்யவேண்டும்.
எஸ்பிஐ அப்ரண்டிஸ் பணிக்கான ஹால் டிக்கெட் தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகளால் வெளியிடப்படும். இந்த அப்ரண்டிஸ் பணிக்கு தமிழகத்தில் மட்டும் 470 காலியிடங்களும், பாண்டிச்சேரியில் 6 காலிஇடங்களும் உள்ளன.