மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய 85 வயது மூதாட்டி…!

Default Image
  • மூதாட்டி ராதாம்மாள்  மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
  • மூதாட்டியின் கடிதம் தங்களுக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் ராதாம்மாள். இவருக்கு வயது 85. இவர் கடந்த 3 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது மகன் ஜனார்த்தனன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூதாட்டி ராதாம்மாள்  மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மூன்று நாட்களாக தன்னை அன்புடன் கவனமாக பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி என எழுதியுள்ளார். கடிதம் குடித்து மருத்துவர்கள் கூறுகையில், மூதாட்டியின் இந்த கடிதம் தங்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்