ஸ்பெயினில் ஒரே நாளில் மிகப்பெரிய பேரிழப்பு 838 பேர் பலி !
கொரோனா வைரஸ் என்னும் கொடூரனின் கோரமுகத்தை இந்த உலகம் சந்தித்து வருகிறது .இதுவரை உலகமுழுவதும் 677,622 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் 31,750 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது .சீனாவில் வ்வுஹான் நகரத்தில் பரவத்தொடங்கிய இந்த வைரஸ் இதுவரை உலகமுழுவதும் 190 க்கு மேற்பட்ட நாடுகளை தாக்கியுள்ளது .
இந்நிலையில் ஸ்பெயினில் ஒரே நாளில் 838 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .இதன் மூலம் அங்கு உயிரிழப்பு 6,528 அதிகரித்துள்ளது .உலகமுழுவதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் 4 வது இடத்தில் உள்ளது உயிரிழப்பில் இத்தாலிக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் உள்ளது.இத்தாலியில் இதுவரை 10,023 பேர் உயிரிழந்துள்ளனர் .
ஸ்பெயினில் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .