கடைசி ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம் 83/1
5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் நிதானமான தொடக்கத்தை அளித்துள்ளனர். 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21ரன்கள் எடுத்துள்ளனர் வார்னர் 10 ரன்களிலும்,பின்ச் 11 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் இன்று தொடங்கியது. முதலில் மோதிய நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தெர்வு செய்தார்.
தற்போது ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் 83 ரன்களை ஒரு விக்கெட் இழந்து நிதானமாக ஆடிவருகிறது. களத்தில் வார்னர் 40 ரன்களுடனும்,ஸ்மித் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்( பின்ச் (32)) விழ்த்தியுள்ளார்.