அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு ஊசி ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான நீரிழிவு நோயாளிக்கு முதன்முறையாக போடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருட காலங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு கொண்டு இருந்ததை அடுத்து தற்போது சில தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக அளவில் முதன்முறையாக பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான பிரையன் பிங்கர் நீரிழிவு நோயாளிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் முதல் கட்டமாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதல் டோஸ் போட்டுக் கொள்ள இருக்கிறார்கள். வரும் சில மாதங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்து பத்து லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…