இங்கிலாந்தில் முதன் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 82 வயது நீரழிவு நோயாளி!

Default Image

அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு ஊசி ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான நீரிழிவு நோயாளிக்கு முதன்முறையாக போடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுது வரையிலும் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு கொண்டு இருந்ததை அடுத்து தற்போது சில தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிக்கு தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக அளவில் முதன்முறையாக பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 82 வயதான பிரையன் பிங்கர் நீரிழிவு நோயாளிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையில் முதல் கட்டமாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதல் டோஸ் போட்டுக் கொள்ள இருக்கிறார்கள். வரும் சில மாதங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோஎன்டெக்  நிறுவனங்களின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்து பத்து லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்