ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது பெறப்போகும் 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி
மணிலா: ஆசியாவின் நோபல் பரிசான மகசேசே விருது 82 வயது ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஈழத் தமிழ்ப் பெண்மணி கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
இலங்கையில் யுத்த காலத்தில் கணவரை இழந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்கிய ஆசிரியர் கெத்சி சண்முகம்.
பிலிப்பைன்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, சிங்கப்பூர் நாட்டவருக்கும் இந்த விருது பர்கிந்து வழங்கப்படுகிறது.
ஆகையால் இங்கு சமூகப்பணி செய்ய வயது ஒரு தடையே இல்லை என உணர்த்திருக்கிறார் இந்த 82 வயது போராளி பெண்.