80ஸ் ஹீரோயின்கள் ஒரே படத்தில்.! படத்தின் பெயர் என்ன தெரியுமா.!
1980-களில் இந்த நான்கு நாயகிகளின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு திரைப்படங்களில் நால்வரின் கதா பாத்திரத்தை கதைக்களமாக கொண்டும், தற்போதைய வாழ்வை அடித்தளமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப திரைப்படமாகும் .
80ஸ் ஹீரோயின்கள் என்றால் நமக்கு நினைவில் வருவது ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி உள்ளிட்ட பலர். தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைகிறார்கள். இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் இந்த படத்தை மிராக்கிள் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் குஷ்பு, ராதிகா, ஊர்வசி, சுஹாசினி ஆகிய நடிகைகள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர். சி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் மற்றும் காமெடி நிறைந்த இந்த படத்திற்கு “ஓ அந்த நாட்கள்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
1980-களில் இந்த நான்கு நாயகிகளின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு திரைப்படங்களில் நால்வரின் கதா பாத்திரத்தை கதைக்களமாக கொண்டும், தற்போதைய வாழ்வை அடித்தளமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப படமாகும் என்று கூறியுள்ளார், இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவு பெற்று ரிலீஸ்க்காக தயாராகி உள்ளது.