மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 80 பச்சிளம் குழந்தைகள் இழந்தனர் !!!
- மருத்துவமனையில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் சிகிச்சை அளிக்க முடியாமல் 80 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்கட்சி தலைவர் ஜீயான் கொய்டோ பதவி வகிக்கிறார்.
வெனிசுலா எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ளது.வெனிசுலா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இந்நிலையில் வெனிசுலா நாட்டில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் 80 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்கட்சி தலைவர் ஜீயான் கொய்டோ பதவி வகிக்கிறார்.ஜீயான் கொய்டோவிற்கு அமெரிக்கா உட்பட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் வெனிசூலாவில் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் “டயாலிசிஸ்” சிகிச்சை பெற முடியாமல் இரண்டு நாட்களில் 15 நோயாளிகள் உயிர் இழந்தனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.