கனடா பேருந்து விபத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டு சிறை

Default Image
  • சம்பவத்தில் 16 பேர் இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர். டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து (இந்தியர்) மீது பாதிக்கப்பட்ட  குடும்பத்தினர் மெபோர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கனடாவின் ஒட்டாவாவில்  கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பேருந்தில்  பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்து நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த டிரக்  கட்டுப்பாட்டினை இழந்து பேருந்து மீது மோதியது.
இந்த சம்பவத்தில் 16 பேர் இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர். டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து (இந்தியர்) மீது பாதிக்கப்பட்ட  குடும்பத்தினர் மெபோர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஜஸ்கிரத் சிங் நெடுஞ்சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இனிஸ் கார்டினல் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார்.
நீதிபதி தனது தீர்ப்பு அறிக்கையில் கூறுவது,இந்த வழக்கில் முக்கிய ஆவணமாக  இருப்பது தடயவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களில் விபத்து நடந்த இடத்தில், எவ்வித இயற்கை காரணிகள் காரணம் இல்லை என கூறியுள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலை வளைவுகளில் இருக்கும் பெரிய குறியீடுகளை கவனிக்காமல் இருந்ததும், ஒளிரும் விளக்குகளை கவனிக்காமல் அலட்சியமாக பேருந்தை ஓட்டியுள்ளார் என நீதிபதி இனிஸ் கார்டினல் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்