பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தின்றதால் 8 மாத கடற்பசு இறந்தது !
தாய்லாந்தில் மரியம் என்ற கடற்பசு நெகிழிப் பொருட்களை சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதை கவனித்த வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு அந்த கடற்பசுவை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.
அவ்வபோது கடற்பசு உடல்நலம் குறித்து ஃபேஸ்புக்கில் வீடியோக்கள் பதிவு செய்து வந்தனர்.
இதனால் தாய்லாந்து மக்களின் மத்தியில் அந்த கடற்பசு அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 8 மாதம் ஆன அந்த மரியம் கடற்பசு இன்று காலை உயிர் இழந்தது.
கடற்பசு வயிற்றில் அதிகமான நெகிழிப் பொருட்கள் இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.