சவுதி அரேபியா விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் , ஏமன் நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரான் ஆதரித்து வருகிறது. மேலும், ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் மாகாணத்தில் உள்ள அப்ஹா எனும் சர்வதேச விமான நிலையத்தில், இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ட்ரோன் மூலமாக விமான நிலையம் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஏவுகணை தடுப்பு அமைப்பு இருந்ததால் இவை தடுத்து நிறுத்தப்பட்டாலும், சில குண்டுகள் விமான நிலையம் மீது விழுந்துள்ளது. இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர். விமானம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ட்ரோன் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…