கராச்சியில் பாய்லர் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு.. 30 பேர் காயம்..!
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை வழக்கம்போல்வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென தொழிற்சாலைக்குள் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது.
பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை கட்டிடம் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த 30 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர். இந்த விபத்தால் அருகில் இருந்த 2 தொழிற்சாலைகள் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.