8 எம்.எல்.ஏக்களை கட்சியில் சேர்ப்பதை தலைமை முடிவு செய்யும்…அமைச்சர் தங்கமணி பேட்டி..!!
18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பு தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
dinasuvadu.com