கடன் பிரச்சனையில் இருந்து மீளுவதற்கு தனது நாட்டில் உள்ள பசுமாடுகளை கொடுத்து கடனில் இருந்து மீண்டது வடமத்திய ஆப்ரிக்க நாடு சாத்.
வடமத்திய ஆப்ரிக்க நாடு சாத், இந்நாட்டிற்கு எண்ணெய் வளம் இருந்தாலும் கூட அந்த வருமானம், போதுமானதாக இல்லை. இதன் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டில் அண்டை நாடான அங்கோவிடம் ரூ.760 கோடி கடன் வாங்கியது. இந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடனை திரும்ப கொடுக்க ஒரு முடிவு செய்துள்ளது. அதாவது, தன் நாட்டில் ஏராளமாக இருக்கும் பசு மாடுகளை கடனுக்கு பதிலாக தருவதாக அங்கோலாவிடம் சாத் கூறியது. அங்கோலாவில் மாட்டிறைச்சி மிக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நாட்டில் இருந்து பிற ஆப்ரிக்கா நாடுகளுக்கு மாட்டிறைச்சி அனுப்பப்படுகிறது. இதனால் கடனை வசூலிக்க வேறுவழியின்றி தன் நாட்டில் இருக்கும் இறைச்சி தொழிலையாவது பலப்படுத்தலாம் என்ற அடிப்பபையில் அதற்கு அங்கோலா நாடு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 பசுமாடுகள் அனுப்ப வேண்டும் என சாத் நாட்டிடம் கூறியுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக 4,500 பசுமாடுகளை சாத் அனுப்பியுள்ளது. இதனை பெற்றுக்கொண்ட அங்கோலா, நோய் பாதித்த மாடுகளை அனுப்பி வைத்திருக்கிறதா என்று சந்தேகப்பட்டு, அதனை ஆராய்வதற்காக ஒரு மைதானத்தில் அனைத்து மாடுகளையும் கடந்த ஒரு மாதத்திற்கு அடைத்து வைத்துள்ளது. தற்போது அந்த மாடுகளுக்கு எந்தவொரு தொற்றும் தெரியவில்லை. இதனால் அதை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க அங்கோலா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முந்தைய காலத்தில் பண்டமாற்றும் முறை இருந்ததை கேள்விப்பட்டிருப்போம். தற்போது அதுபோன்று முதல் முறையாக இரு நாடுகளும் பண்டமாற்று முறையில், கடன் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…