750 பேர் காயம்…ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்…மக்கள் பீதி…!!

Default Image

ஈரான் நாட்டின் தெற்கில் எகிப்து நாட்டின் எல்லையை அருகே  அமைந்துள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல்-இ-சகாப் நகரில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 என்ற புள்ளிகளில் பதிவானது.இந்த நிலநடுக்கமானது கெர்மன்ஷா மாகாணத்தில் இருக்கும் நகரங்களையும் , கிராமங்களையும்  கடுமையாக உலுக்கியது.இதனால்  வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலமாக குலுங்கின.நிலநடுக்க அதிர்வால் பீதியடைந்த மக்கள் வீடுகள் , கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.
பல இடங்களில் வீடுகள் இடிந்து , மின்கம்பங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. தற்போது வரை  நிலநடுக்கத்தால் 716 பேர் காயம் அடைந்துள்ளதாக  ஈரான் அரசு அதிகாரபூர்வ தகவல் வெளியிள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை போலீசார், ராணுவத்தினர் மற்றும் மீட்புகுழுவினர் இணைந்து தீவிர மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

DINASUVADU.COM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்