75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்! அமெரிக்காவின் அதிரடி முடிவு! இதன் பின்னணி என்ன?
75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிடும் அமெரிக்கா.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, புதிய புதிய நோய்களும் தோன்றி அமெரிக்க மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு அமெரிக்காவின், ஃப்ளோரிடாவில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்களுக்கு வைரஸ்களும், கொசுக்களுமே முக்கிய காரணமாக உள்ளது. இதனையடுத்து அமெரிக்கா, கொசுக்களின் மூலம் பரவும் சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களை தடுப்பதற்க்காக ஒரு விபரீத முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில், 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை வெளியிட உள்ளது. இந்த கொசுக்கள் டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுத்து, அவற்றை முழுமையாக ஒலிக்கும் என அமெரிக்க அரசு நம்புகிறது.