மியான்மர் ராணுவ ஆட்சிக்கு பின் இதுவரை 740 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

Default Image

மியான்மரில் ராணுவ ஆட்சி மாற்றப்பட்டதில் இருந்து இதுவரை 740 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைதுசெய்யப்பட்டு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனை அடுத்து மியான்மர் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் மியான்மரில் நடக்கக்கூடிய ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அண்மையில் மியான்மரில் இணைய சேவைகள் முழுவதும் முடக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய இந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய பொதுமக்களை ராணுவங்கள் கொலை செய்தும் வருகின்றன. தொடர்ச்சியாக இந்த சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், இதுவரை மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து தற்போது வரை 740க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டம் நடத்தும் பொழுது நூற்றுக்கும் அதிகமானோர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். மியான்மரில் நடக்கக்கூடிய இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து மக்கள் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்