“737 மேக்ஸ் விமான” விபத்தில் உயிரிழந்த 346 குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவிப்பு !
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் ரக விமானங்களை தயாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் இந்த விமானங்கள் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துள்ளாகின. இந்தோனேசியாவில் நடந்த விபத்தில் 189 பேரும், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இதில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்குறிய காரணத்தை கண்டுபிடித்த போது சாப்ட்வேர் மற்றும் தவறான சென்சார் தகவல்கள் தான் தெறியவந்தது. இதன் பின் 737 மேக்ஸ் ரக விமானங்களை தடை செய்தனர். இந்த விபத்து காரணமாக போயிங் நிறுவனத்தின் மீது பல்வகை வழக்கு பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி பலியான அனைத்து குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். உயிரிழந்த 346 குடும்பங்களுக்கும் தலா 1 கோடி 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என போயிங் நிறுவனம் அறிவித்துள்ளனர்.