730 நாள் லீவு கேட்ட அரசு அதிகாரி..!!

Default Image

730 நாள் லீவு கேட்ட பாகிஸ்தான் இரயில்வே அதிகாரி!

பாகிஸ்தானில் இரயில்வேதுறை அமைச்சர் மீது அதிருப்தியடைந்த அதிகாரி ஒருவர், 730 நாள் விடுமுறை கேட்டு கடிதம் அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதனால், அமைச்சரவை மாற்றப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் புதுபுது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ரயில்வேதுறையின் புதிய அமைச்சராக ஷேக் ரஷீத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அங்குள்ள ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது அனீப் குல் என்பவர் 730 நாட்கள் தனக்கு விடுமுறை வேண்டும் என்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதைவிட அதற்கு அவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் எழுதிய அந்த கடிதத்தில் ‘ரயில்வே துறையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷேக் ரஷீத்துக்கு பணி தொடர்பாக எதுவும் தெரியவில்லை. மேலும், அரசு ஊழியர்களுடன் அவர் மரியாதை குறைவாக நடந்து கொள்கிறார். அவருடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது. எனவே, எனக்கு சம்பளத்துடன் 730 நாட்கள் விடுப்பு வேண்டும்’ இவ்வாறு அவர் தெரவித்துள்ளார்.
அமைச்சரின்  செயல்பட்டால் அதிர்ப்தி அடைத்து அரசு ஊழியர் அனுப்பிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது..
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்