சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று..!

Default Image

சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனது.  இதனையடுத்து உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்று பலவகைகளில் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு வருடம் ஜனவரி மாதம் சீனாவில் 92 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவே இந்த வருடத்தின் அதிகபட்ச பாதிப்பாக சீனாவில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது.

மேலும், சீன அரசு அறிகுறி இல்லாத கொரோனா பாதிப்புகளை தொற்று எண்ணிக்கையில் சேர்ப்பதில்லை. அந்த வகையில் தற்போது சீனாவில் 27 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்