உலகம் முழுவதும் பலரும் உபயோகம் செய்து வரும் ஒரு ஆப் என்றால் அது வாட்ஸ்அப் என்று கூறலாம். இப்படியான வாட்ஸ்அப் பயன்படுத்தி பயனர்கள் சிலரை ஏமாற்றி பணம் பறித்தும் வருகிறார்கள். இதனால் பெறப்படும் புகார்கள் அடிப்படையில், வாட்ஸ் ஆப் புகார்களை ஏற்றுக்கொண்டு கணக்குகளை தடை செய்து வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 75 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கம் செய்தது. அதற்கு காரணமும், வாட்ஸ்அப் பயன்படுத்தி இணையவாயிலாக மோசடி செய்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தான் கணக்கு நீக்கம் செய்யப்பட்டது.
ரூ.12,000 தள்ளுபடி! ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்!
இந்த நிலையில், அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 7.1 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகளை தடை செய்துள்ளதாக மெட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தின் அடிப்படையில், பயனர்களின் புகார்கள் முதல் அரசின் பரிந்துரை வரை கொடுப்பக்கட்ட புகாரின் அடிப்படையில், 7.1 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்டா நிர்வாகம் அறிவித்ததாவது ” இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட 8,841 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டு இருக்கிறது” எனவும் அறிவித்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…