அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 7 வயது சிறுமி உயிரிழப்பு!

Default Image

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் என்னுமிடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி உயிரிழந்ததுடன், அவரது தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட் எனும் இடத்தில் ஜோண்டே ஆடம்ஸ் எனும் 28 வயது நபர் அவரது ஏழு வயது மகள் ஜாஸ்மின் ஆடம்ஸ் உடன் தங்கள் காரின் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜேண்டே ஆடம்ஸின் 7 வயது மகள் ஜாஸ்மின் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் ஜேண்டேயும் அவ்விடத்தில் மிகவும் தாக்கப்பட்டுள்ளார். அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் அவரது ஏழு வயது மகள் ஜோஸ்லின் சம்பவ இடத்திலேயே துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் அடிவயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமிக்கு 3 உடன்பிறப்புகள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், அவரது தாயாருக்கும் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்