எனக்கு நல்ல தந்தை வேண்டும் -7 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கடிதம்

Published by
Venu
  • கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
  • சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு  நெகிழ்ச்சியான கடிதம் எழுதியுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அனைத்து குழந்தைகளுக்கும் ஞாபகம் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தான்.இதனால் குழந்தைகள் அனைவரும் கிறிஸ்துமஸ்  பண்டிகை எப்போது  வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.அந்த வகையில் சிறுவன் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக முகாம் ஓன்று செயல்பட்டு வருகிறது.அந்த முகாமில் 7 வயது நிரம்பிய பிளேக்  (Blake) என்ற சிறுவன் உள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் இந்த சிறுவன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கோரிக்கை வைக்கும் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.அந்த கடிதத்தில்,அன்புள்ள சாண்டா,நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. என்னுடைய அப்பா சரி இல்லாதவர்.அம்மா கூறுகையில் ,நாம் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என்று கூறினார். நான் பதற்றமாக இருக்கிறேன்.மற்ற குழந்தைகள் மாதிரி நான் பேசவிரும்பவில்லை.இந்த கிறிஸ்துமஸ்க்கு நீங்கள் வருவீர்களா? எங்களிடம் எதுவுமே இல்லை.

 

நீங்கள் வீட்டிற்கு வரும்போது கொடுப்பதற்கு எதுவும்இல்லை என்றும் வரும்போது கண்டிப்பாக வரும்போது புத்தகங்கள், டிக்சனரி ,காம்பஸ்,வாட்ச் வேண்டும் …எனக்கு நல்ல தந்தையையும் கொண்டு வரவும் என கேட்டுள்ளார்.தற்பொழுது இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
Venu

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

16 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

1 hour ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago