“உலகின் வேகமான சிறுவன்” என்ற பட்டத்தை வெற்ற 7 வயது சிறுவன்!
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சார்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற 7 வயது சிறுவன் உலகின் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை வென்று உள்ளார். இந்த சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13. 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்து உள்ளார். ஓட்டப்பந்தயத்தில் மற்ற சிறுவர்கள் பாதி மைதானத்தை ஓடி வருவதற்குள் ருடால்ப் இலக்கை ஓடி முடித்து விடுகிறார்.
உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்டின் வேகத்திற்கு இணையானது இந்த சிறுவனின் ஓட்டம் என உடலியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.