படகு கவிழ்ந்து 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு
காசிபூரில் படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உத்திரபிரதேசத்தின் காசிபூர் கங்கை நதியில் புதன்கிழமை(ஆகஸ்ட் 31) மாலை 17 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
“தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) உதவியுடன் 10 பேர் மீட்கப்பட்டனர், மேலும் 7 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன” என்று காசிபூர் ஏடிஎம் அருண் குமார் சிங் கூறினார்.
காசிபூர் மாவட்ட நிர்வாகம், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளது.