சீனாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 3 பேர் பலி; 23 பேர் காயம்!

சீனாவில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலி பகுதியில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிக்டர் ஆக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில் நேற்று மாலை 7 மணியளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவாக பதிவானதாகவும், அதேபோல இன்று அதிகாலை 3.00 மணியளவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.3 ஆக பதிவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து உள்ளதாகவும், இதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 23 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முழு சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025